கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடிடித்தளத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது ஆர்யாவுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இந்நிலையில் இரட்டிப்பு மகிழ்ச்சியாக ஆர்யா-சாயிஷா நட்சத்திர தம்பதிகளுக்கு மகள் பிறந்துள்ளார், நடிகர் ஆர்யா கடந்த 2019 ஆம் ஆண்டு கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த போது தனக்கு ஜோடியாக நடித்த நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில்,திரையுலக நட்சத்திரங்களான ஆர்யா – சாயிஷா தம்பதி குறித்து மிகவும் மகிழ்ச்சியான செய்தியை அவர்களுடைய நண்பரான நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், இந்த சந்தோஷமான விஷயத்தை பகிர்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
எனது சகோதரன் ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தி விவரிக்க முடியாதளவுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பொறுப்பான அப்பாவாக பொறுப்பேற்கும் ஆர்யாவுக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.