அவன் இவன்’ படத்திற்குப் பிறகு என்னை முழுமையாக அர்ப்பணித்து நடித்த படம் மருது.அதாவது மத்த படங்களில் சில காட்சிகளில் அட இதெல்லாம் சீன்ல தெரியாது என சில விசயங்களை அசால்டாக விட்டுருக்கிறேன் அண்ணல் இதில் அப்படியல்ல!ஒவ்வொரு சீனிலும் நிறைய மெனக்கெட்டு நடிச்சிருக்கேன். ஒரு காமெடியனாக எல்லோருக்கும் நன்கு தெரிந்த சூரி இப்படம் மூலம் சிறந்த குணசித்திர நடிகராகவும் வலம் வருவார். கிளை மாக்ஸ் காட்சியில் அவர் எல்லோரையும் கலங்க வைத்து விடுவார்.வில்லனாக நடித்துள்ள ஆர்.கே. சுரேஷ். வெறித்தனமாக நடித்துள்ளார். நாங்கள் இருவரும் நடித்துள்ள கிளைமேக்ஸ் காட்சியில் அவருடைய நடிப்பு பேசப்படும். ஸ்ரீதிவ்யாவுடன் நான் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் படம் இது. கதாநாயகன் யாராக இருந்தாலும் இயக்குனர் முத்தையா அடுத்து இயக்கும் படத்தை எங்களது பட நிறுவனம் தான் தயாரிக்கும் இது உறுதி! என்கிறார்விஷால். அன்னையர் தினத்தில் கீழ்பாக்கம் மெர்சி ஹோம் முதியோர் இல்லத்தில் உள்ள அதரவுற்ற முதியோர்களுக்கு உணவு அளித்தார் தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் நடிகர் விஷால் அவர்கள் உடன் மேலாளர் முருகராஜ் மற்றும் நற்பணி இயக்கத்தின் தலைவர் ஜெயசீலன்,செயலாளர் ஹரி உடன் இருந்தனர்