சமுத்திரகனி, யோகி பாபு இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கு “யாவரும் வல்லவரே” என பெயரிடப்பட்டுள்ளது.
என்.ஏ. ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கி வரும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் பிரபு திலக் கூறியதாவது…
“எங்கள் நிறுவனத்தின் மூலம் வெளியகும், அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பார்டர்” விரைவில் வெளியாகவுள்ளது. இந்த தருணத்தில் எங்களின் அடுத்த படைப்பாக “யாவரும் வல்லவரே” படத்தை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.
ஹைப்பர்லிங்க் வடிவில் 4 வெவ்வேறு களங்களில் நடக்கும் சம்பவங்களை, இணைத்து சொல்லும் வித்தியாசமான படைப்பு இது. இயக்குநர் என்.ஏ. ராஜேந்திர சக்ரவர்த்தி திரைக்கதையை கூறியபோது அவரது ஐடியாவும் படம் குறித்த பார்வையும் மிக வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன்.
மேலும் கதையில் எதிர்பாராத பல திருப்பங்களும், கதையின் போக்கில் அவிழும் பல முடிச்சுகளும் இப்படத்தை பெரிய திரையில் காணும் என் ஆர்வத்தை அதிகப்படுத்தின. உடனடியாக இப்படைப்பில் இணைய ஒப்புகொண்டதற்கு இது தான் முதன்மை காரணம். என்கிறார்.
இப்படத்தில் சமுத்திரகனி மற்றும் யோகி பாபு ஆகியோருடன், நான் கடவுள் ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ மல்லூரி, போஸ்டர் நாதகுமார், ரித்விகா, சைத்தான் அருந்ததி மேனன், மற்றும் தேவ தர்ஷினி ஆகியோர் நடிக்கின்றனர்.