மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில்,சென்னைஅருகேயுள்ள பனையூரில் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் விஜய்க்காக அவரது ரசிகர்கள் ஆள் உயர வெண்கல சிலை ஒன்றை அமைத்துள்ளனர்.
இந்த சிலையை விஜய் மக்கள் இயக்க செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்துள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் இப்புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன இன்று மாலை திடீர் ஆலோசனை நடத்தியுள்ளார் இதில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
நாளை நடிகர் விஜயின் சொகுசு கார் வரிவிலக்கு வழக்கில் மேல் முறையீடு மனு விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது