“எனக்கும் , கன்னிகாவிற்கும் வருகிற (29-07- 2021) வியாழன் அன்று சென்னையில் உலக நாயகன் நம்மவர் மக்கள் நீதி மய்யத் தலைவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் திருமணம் நடைபெற இருக்கிறது.
இந்த திருமண விழா உங்கள் அனைவரின் முன்னிலையிலும், உங்களின் அன்புக்கு மத்தியிலும் நடக்க வேண்டும் என்பதே என் பெரும் ஆவல். அது முடியாத சூழ் நிலையில் காலம் நம்மை நகர்த்தி செல்கிறது என்பதால் உங்கள் அனைவரையும் அழைக்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்குள் வேரோடிக் கொண்டிருக்கிறது. அது நீங்களும் அறிந்ததே.
இன்றைய சூழ்நிலையில் மனிதர்கள் கூடி மகிழ்வது மனிதர்களுக்கே பேராபத்தாக இருப்பதால். நம் அனைவரின் நலன் கருதி மிக எளிமையாகவும் , தனி மனித இடைவெளியோடும். அரசு விதி முறைகளோடும் நடைபெறுகிறது
எனவே தளர்வுகளுக்கு பின் விரைவில் உங்களை சந்திக்கிறேன்.
எங்கள் திருமணம் விழா நடந்து முடிந்த 1 மணி நேரத்தில் நிழல்படங்களும் , வீடியோக்களும் உங்களை தேடி வந்து சேரும்.
எப்போதும் போல உங்கள் நட்பையும் ஆதரவையும் வேண்டுகிறேன்.” என்பதாக மக்கள் நீதி மய்ய பிரமுகர் சினேகன் அறிவித்திருக்கிறார்.
இசைஞானி இளையராஜா கூட வரமாட்டாரா? மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசனுக்கு ஞானி மிகவும் வேண்டப்பட்டவரய்யா!
ஓஓ ..கொரானா பயம்.! அதுசரி கவிஞரே…ஆடி மாசம் யாரும் கல்யாணம் பண்ண மாட்டாங்க.புதுசா கல்யாணம் பண்ணிய ஜோடிகளைக்கூட ஆடியில் பிரித்து வைத்து விடுவார்கள் .நீங்க எப்படி?