( படம் உதவி; மூலக்காரன்.)
சற்றே அசதி…இடது காதில் பிரச்னை .வலி. வெளியில் சொன்னால் பிள்ளைகள் கலங்கிப்போவார்கள் என்பதினால் எதனையும் முகத்தில் காட்டவில்லை. படுக்கையிலேயே முடங்கி விட்டேன்.
ஆனாலும் சற்றே பரவாயில்லை என்பதினால் செய்தியைத் தொட்டால் “வெளியில் சொல்ல முடியாத காரணத்தினால் மணவிலக்கு கேட்கிறேன் “என்கிற சேதி .
மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி ,கேரளா சட்டமன்ற உறுப்பினர் நடிகர் முகேஷின் இரண்டாவது மனைவி மேதில் தேவிகா விவாக ரத்து கேட்டிருக்கிறார்.இவர் கல்வியாளர். இந்திய நடனம் பற்றிய ஆராய்ச்சியாளர். கல்லூரிகளுக்கு விசிட்டிங் ப்ரொபஸர் .முன்னர் மணமாகி பின்னர் விவாக ரத்துப் பெற்றவர்.
இவரைப்பற்றி இவ்வளவு தகவல் தேவையா ,என்றால் அவசியம்தான் ,முகவுரை தேவைதான்.
ஏனெனில் இவரது கணவர் நடிகர் முகேஷ் நாடறிந்தவர்.
முதல் மனைவி சரிதா மனம் நொறுங்கி மணவிலக்கு பெற்று பிரிந்து சென்றவர். பிரிகிறபோது கணவர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிச்சென்ற அடுக்கியவாதி.!!!
மேதில் தேவிகா என்ன சொல்கிறார்.?
“மணவிலக்குக்கான காரணம் தனிப்பட்டது.அதை வெளியில் சொல்லவிரும்பவில்லை. முகேஷின் அரசியல் வாழ்க்கைக்கு பாதிப்பு வந்து விடக்கூடாது. திரைப்பட வாழ்க்கைக்கும் பங்கம் நேரிடக்கூடாது.
அவரின் மீது எத்தகைய வன்முறைப் புகாரையும் நான் மனுவில் கூறவில்லை.
ஆனால் அவர் நல்ல கணவர் அல்லர்.எட்டு ஆண்டு கால இல்லற வாழ்க்கை .அவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை.எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் புரிந்து கொள்ள முடியாது. இவை தவிர அவர் மீது எனக்கு எவ்விதக் கோபமும் இல்லை. மணவிலக்கு எனது தனிப்பட்ட முடிவு!” என்று சொல்கிறார் .
எனக்கு என்ன வியப்பு என்றால் அவரது நேர்மையான கோரல்.!
“வாழப்பிடிக்கல.உன்னோடு இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் உன்னை புரிந்து கொள்ள முடியாது என்கிறபோது எதற்கு பொய்யான முகமூடி. ? கழற்றி ஏறி!