தேசியவிருது நடிகர் தனுஷ் தமிழைத்தொடர்ந்து பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகிலும் தனது நடிப்பை விரிவு படுத்தியுள்ளார்.சமீபத்தில் தனது 38 வது பிறந்த நாளை ஐதராபாத்தில் கார்த்திக் நரேன் மற்றும் மாறன் படக்குழுவினருடன் கொண்டாடினார்.
இந்நிலையில் தனுசுக்கு பிரபல ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்’என்ற தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிறுவனம்தான் தனுஷ்-சேகர் கம்முலா இணையும் திரைப்படத்தை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரஜினிகாந்துக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை சூட்டியது பட அதிபர் கலைப்புலி எஸ்.தாணு என்பது குறிப்பிடத்தக்கது.