கப்பலோட்டிய தமிழன் என்கிற அரிய சாதனையை அந்நியரின் ஆட்சி காலத்தில் நிகழ்த்திக்காட்டியவர் வ.உ .சிதம்பரம் பிள்ளை.
தீவிரவாதியாக திகழ்ந்ததினாலேயோ என்னவோ மிதவாத இயக்கமாகிவிட்ட காங்கிரஸ் கட்சி இவரை கொண்டாடுவதில்லை.
தற்போது திடீர் மாற்றமாக அந்த பெருமகனாரை திரை உலகம் கொண்டாடுகிறது.
கடந்த 50-வது இந்திய சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், வைரமுத்து வரிகளில் பரத்பாலா இயக்கத்தில், ‘தாய்மண்ணே வணக்கம்’ எனத் தொடங்கும் – ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் வெளியாகி இந்திய அளவில் பிரபலமானது.
இந்நிலையில்,வரும் 75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழர்களின் தியாகத்தை உணர்த்தும் விதமாகவும் இந்தியாவெங்கும் இருக்கும் சுதந்திர வீரர்களின் பெருமைகளை போற்றும்படியும் ஏ.ராஜசேகர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் அருண்ராஜா காமராஜ் வரிகளில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் பிரமாண்டபடைப்பாக ‘பெருங்காற்றே’ பாடல் உருவாகிறது.
தமிழில் தொடங்கி இந்தியாவில் திரைப்படங்கள் உருவாகும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஒரியா, மராட்டி, பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி, குஜராத்தி, கொங்கனி உள்ளிட்ட 12 மொழிகளில் இந்த பாடல் உருவாகிறது.
இந்திய முன்னணி திரைப்பட கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இப்பாடல் உருவாக்கத்தில் பங்கு கொள்ளவிருக்கிறார்கள்.கன்னியாகு
இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் காட்சி ஊடகங்களிலும் இப்பாடல் திரையிடப்பட இருக்கிறது.இப்படப்பிடிப்பின் சிறப்பு நிகழ்வாக கனெக்டிங் இந்தியா வித் கலர்ஸ் என்ற தலைப்பில் உலக சாதனை முயற்சியாக 6 கி.மீ. நீளத்திற்கு கேன்வாஸ் பெயிண்டிங் வரையப்படுகிறது.
தமிழகம் தொடங்கி இந்தியாவெங்கும் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களின் வரலாற்று நிகழ்வுகள் வரையப்படுகிறது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 75 முன்னணி ஓவியக்கலைஞர் வரைகிறார்கள்.இந்த பாடலின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வரும் செப்டம்பர் 5-ல் தொடங்கும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது ஆண்டு விழாவில் வெளியிடப்பட இருக்கிறது.