அர்ப்பணிப்புடன் நடிக்கவேண்டும் என்பது வரவேற்புக்குரியதுதான் என்றாலும் அதற்கென ஒரு எல்லைக்கோடும் இருக்கவேண்டும் அல்லவா? எச்சரிக்கையும் தேவையல்லவா?
இதோ ஒரு நிகழ்வு.படப்பிடிப்பில் சேரன் தவறி விழுந்து 8 தையல்கள் போடப்பட்டுள்ளன.
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சேரன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவர் சிறந்த இயக்குநரும் ஆவார்.
நட்சத்திரங்கள் எந்த அளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை அறியாதவர் அல்லர். அவர்தான் தவறி விழுந்திருக்கிறார் என்கிறபோது அந்த காட்சியின் தாக்கம் எந்த அளவு அவரை பாதித்திருக்கிறது என்பதை உணர முடிகிறது.
உயர்ந்த கட்டிடங்களில் பணியாற்றுகிறபோது எத்தகைய பாதுகாப்பு இருக்க வேண்டும்?இயக்குநர் நந்தா பெரியசாமி கவனிக்கத் தவறி விட்டாரா?
அவர் என்ன சொல்கிறார்.?
“தயாரிப்பாளர் ரகுநாதன் சார் இந்தப் படத்திற்காக செட் அமைப்பதற்கு பதிலாக 80 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டிக்கொண்டிருக்கிற இடத்திலேயே படப்பிடிப்பை நடத்திக்கொள்ளலாம் என்று சொன்னார். அதன்படிதான் அந்த புதிய இடத்தில் படப்பிடிப்பு நடந்தது.
சேரன் வீட்டை சுற்றி பார்க்கும் போது கீழே விழ வேண்டும் என்பது காட்சி.ஆனால் நிஜமாகவே வழுக்கிவிட்டது. அவருக்கு எட்டு தையல் போடப்பட்டிருக்கிறது.. தையல் போடப்பட்ட அடுத்த பத்து நிமிடத்தில் வந்து நடித்துக் கொடுத்தார். “என்கிறார் இயக்குநர் .
இன்று காலை தான் அவருக்கு தையல் பிரிக்கப்பட்டிருக்கிறது. பெருமைக்குரிய விஷயம்தான் !
ஆனால் ….?