.@iYogiBabu, #VTVGanesh & #LiliputFaruqui join the cast of #Beast!@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja#BeastCastUpdate pic.twitter.com/a27SKqlPMD
— Sun Pictures (@sunpictures) August 7, 2021
‘பீஸ்ட்’ படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
இந்த படத்தில் வில்லனாக நடிக்கிற வாய்ப்பு செல்வராகவனுக்கு கிடைக்கலாம் என்று சொல்கிறார்கள்.
இன்று அறிவிக்கப்பட்ட அறிவிப்பில் செல்வராகவன் ,யோகிபாபு ,விடிவி கணேஷ் ,லில்லி புட் பிருக்கி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். அனிரூத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் ஒன்றன் பின் ஒன்றாக அறிவித்து வருகிறது. ஏற்கனவே விஜய்க்கு ஜோடியாக தெலுங்கில் பிரபல நடிகையாக உள்ள பூஜா ஹெக்டே நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது. ஜார்ஜியாவில் சென்னையிலும் நடந்த படப்பிடிப்பின் தொடர்ச்சியாக சென்னை விமான நிலைய பகுதிகளில்மூன்றாவது கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என சொல்கிறார்கள் .
இந்த படப்பிடிப்பை முடித்து விஜய் மற்றும் படக்குழுவினர் ரஷ்யாவுக்கு செல்லவுள்ளனர்.