“கூடியிருக்கிற மகாஜனங்களே ,வேடிக்கை பார்க்க வந்திருந்தாலும் சரி ,வசிய மருந்து வாங்க வந்திருந்தாலும் சரி…கண்களை மூடிக்கோங்க .மந்திரத்த சொல்லி முடிக்கிறதுக்குள்ள கண்ண தொறந்தா இந்த மந்திரவாதி மாயாண்டி பொறுப்பில்லை. பொறுத்தார் பூமியாள்வார்ன்னு பெரிய மனுசங்க சொல்லிருக்காங்க.” இப்படி ஏகப்படட பில்டப்புகளை அள்ளிவிட்டு வசிய மை விற்கிற ஆளு அவனுடைய வியாபாரத்தை பார்த்து விட்டுப் போய் விடுவான்.
ஆனால் ரகுல் பிரீத் சிங் அப்படியில்ல.
நீங்க கண்ணை மூடிக்கிட்டாலும் சரி மூடாவிட்டாலும் சரி கண்களுக்கு நிறைவாக ,குளிர்ச்சியாக காட்சி தருவார்.
என்ன நான் சொல்றது உண்மைதானே!
இப்ப ரகுலிடம் இந்தி தமிழ் தெலுங்கு உள்பட 8 படம் கைவசம். ஆகவே அகலமாக திறந்து பார்க்கலாம் கண்களை.!