தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறுவதையொட்டி அன்றைய தினம் பொதுவிடுமுறையாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அன்றைய தினம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக அன்றையை தினம் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைபுலி எஸ்.தாணு அறிவித்துள்ளார்.
மற்றபடி நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித், விஜய், விக்ரம், விஷால், கார்த்தி.சிம்பு ,தனுஷ் உள்பட அனைத்து நட்சத்திரங்களும் வரும் 16ஆம் தேதி ஓட்டு போடுவார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம் . |