- பொன்னை விரும்பும் பூமியிலே
- என்னை விரும்பும் ஓருயிரே
- புதையல் தேடி அலையும் உலகில்
- இதயம் தேடும் என்னுயிரே—கவியரசர் கண்ணதாசனின் கற்பூர வரிகள்.
காலம் கடந்தும் சாகா வரம் பெற்ற மந்திரச்சொற்கள் .காதல் ,கற்பு என்பதெல்லாம் ஒரு முறை பூக்கும் பொன்னிறப் பூக்கள் .கலாசாரம் காக்கிற அரண்கள் என்றெல்லாம் நம்பினார்கள் ஒருகாலத்தில்!
ஆனால் கால வேகத்தில் அந்த அரண்கள் அடித்துச்செல்லப்பட்டன.
தாலி கட்டி வாழ்வதை விட இஷ்டப்பட்டு இணைந்து வாழ்தல் எவ்வளவோ உயர்வு என்கிற மனப்பான்மைக்கு இளையோர் வந்து விட்டார்கள்.
சிலம்பரசன் – நயன்தாரா காதல் சிலகாலம் உதடு கடித்து இழுத்து வாழ்ந்தது.
கசந்தது. பிரிந்தனர்.
மனைவியைப் பிரிந்து வாழ்ந்த பிரபு தேவாவுடன் நயன்தாரா இணைந்து நான்காண்டுகள் வாழ்ந்திருந்தார். அவர்களது தாம்பத்யத்துக்கு சான்றாக நயனின் கையில் பச்சை குத்தப்பட்டது.பிரபுவின் பெயரை குத்தியிருந்தார்.
மூன்றாவது காதலர் விக்னேஷ்சிவன்.
லீவ் இன் ரிலேஷன் .வாழ்க்கை சுகமாக செல்கிறது.ஒன்றாக வாழ்தல் ,ஒன்றாக உலகம் சுற்றல் என கணவன் மனைவியைப்போலவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஓணத்துக்கு நயனின் வீட்டுக்கு சென்றவர்கள் உடல் நலமற்று இருக்கும் நயனின் தந்தையின் முன்னிலையில் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்து கொண்டுவிட்டனர்.
விரைவில் திருமணம் என்கிறார்கள். கோவிட் காலம் முடிந்தபின்னர்.!
வாழ்க மணமக்கள்.!