ரொம்பவும் அமைதியான ஆள் ஆச்சே நம்ம லிங்குசாமி ,அவருக்கா கோபம் வந்திருக்கு ?
ஆச்சரியமாகத்தான் இருந்தது.
“உங்க ஊரு டைரக்டர் எங்க ஊரு நடிகையை திட்டித்தீர்த்துட்டார்!” மாநில பிரச்னையை கையிலெடுத்துவிடுவார்களோ என்கிற பயம் வந்தது.
தகவல் சொன்ன நண்பர் உங்கவூரு ,எங்க ஊரு நடிகைன்னு பிரித்துச்சொன்ன பாங்கு அத்தகைய எண்ணத்தை உருவாக்குவது போலிருந்தது.
“மேட்டருக்கு வா நண்பா.!?”
“RAPO19-ன்னு ஒரு தெலுங்குப்படம் டைரக்ட் பண்றார் ,லிங்குசாமி .தமிழ் ,தெலுங்கு படம்.ஒரே நேரத்தில் தயாராகுது. ஹீரோ ராம் பொத்தினேனி .இவரது ஜோடி கிரித்தி ரெட்டி .ஆக்சன் படம்.மிருகம் ஆதிக்கு முக்கிய கேரக்டர். அதிக சம்பளம் .கிரித்தி ரெட்டியுடன் இன்னொரு ஹீரோயினும் நடிக்கிறார்.அக்சரா கவுடா.
முக்கியமான சீன். கிரித்தி ஷெட்டிக்கு விளக்கி சொல்லிவிட்டு ரிகர்சல் பார்த்தார் டைரக்டர். சொதப்பலாக இருந்தது.
ஒன் மோர் ? ஹூக்கும் .பிரயோசனமில்லை.
ரீ டேக்…ரீ டேக் …..ரீடேக் இப்படி டேக்குகள் வாங்கிக்கொண்டே இருக்கிறார் நடிகை என்றால் மனிதருக்கு கோபம் வருமா வராதா?
நாசர் வேற பரிதாபமாக அந்த சீன் எப்படா முடியும் என்று காத்திருக்கிறார். இவருக்கும் எரிச்சல்.!
ஏறத்தாழ ஒரு மணி நேர அறப்போர்.! அப்புறம் என்ன சா…ர்…..ஜ் தான்!
லிங்குசாமி திட்டித்தீர்த்து விட்டார்.
கிரித்தி ஷெட்டி கேரவேனுக்குள் சென்று அழுது புலம்பியிருக்கிறார்.