தமிழகத்தின் மிகப்பெரிய தொன்மையான சைவ சமயத் திருமடம் மதுரை ஆதீனம் .1500 ஆண்டுகளுக்கு முன்னர் சைவ சமயக் குரவர் திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.
அந்த திருமடத்தின் 292 ஆவது குருமகா சந்நிதானம் அருணகிரிநாதர் உடல் நலக்குறைவால் இயற்கை அடைந்தார்.இவரது வயது 77.
இவர் சென்னையில் சிலகாலம் பத்திரிகையாளராக இருந்தவர்.
சைவத்தைப்போற்றியும் சில நேரங்களில் அரசியல் கருத்துகளையும் வெளியிட்டுவந்தவர்.
இந்து தேசத்தின் அதிபதியென தன்னை அறிவித்துக் கொண்டிருக்கிற நித்தியானந்தா இந்த மடத்துக்கு வாரிசு உரிமை கொண்டாடியிருக்கிறார் .
அறிக்கைகளும் வெளியிட்டிருக்கிறார்.
மதுரை குரு சந்நிதானம் தவறுதலாக இளைய பீடாதிபதியாக முடி சூட்டிய படங்களையும் நாடு கடந்து ஓடிப்போன நித்யானந்தா வெளியிட்டிருக்கிறார்.
இன்னொரு பரபரப்புக்கு மதுரை தயாராகிறது.