“போட்டா ராணி வேஷம்தான்.”என்று விடாப்பிடியான கொள்கையில் இருந்தவர் இலியானா .
சேடி வேஷம் கூட வருவதாக இல்லை. இத்தனை காலமாக கூடவே இருந்த நண்பனையும் கழட்டி விட்டாச்சு . பாவம் அந்த கேமரா ஆள். அனுபவிச்சது வரை லாபம்தான் என்று அந்தாளும் பைபை சொல்லிட்டார்
“ஹீரோயின் கேரக்டர் இருந்தா கூப்பிடுங்க வரேன் “என்று கட்டழகு போட்டோக்களை அள்ளி விட்டார்.
உனக்கும் மேலே நாங்க இருக்கோம் என்று புது வரவுகள் விதம் விதமாக போட்டோ காட்டிவிட்டார்கள் .கடுமையான போட்டியில் காலாட்டியபடியே வீட்டில் இருக்க வேண்டியதாகிவிட்டது இலியானாவின் நிலைமை.!
காலமும் வயதும் நிலைமையை உணர்த்தியது.
வாய்ப்பு வந்தால் ஹீரோயின்; வராவிட்டால் அயிட்டம் ஆட்டம்.! நிரப்பு கல்லாவை.!
ரவி தேஜாவின் “ராமராவ் ஆன் டியூட்டி “என்கிற படத்தில் அயிட்டம் டான்ஸ் ஆட ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
தமன்னாதான் வழிகாட்டி .
ஆற்றுக்கு போயும் வேர்த்து வடிஞ்சா என்ன செய்யமுடியும்?