பொய்யான குற்றச்சாட்டு ,துன்புறுத்தல் ,கட்டு அபராதம் அஞ்சு லட்சம் !
பிரபல படத்தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கு நீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்புதான் இது.!
தமிழ் தெலுங்கு இரு மொழி நடிகர் விஷால்.
சக்ரா என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினால் வந்த விவகாரம் விஷாலின் தோளில் ஏறி அமர்ந்து செவியை குடைந்தது.பட நிறுவனமான லைகா வழக்குத்தொடர்ந்தது விஷால் மீது.!
பொய்யான குற்றச்சாட்டு என விஷால் எதிர்த்து வாதாடினார்.
கடைசியில் விஷாலுக்கு சாதகமான தீர்ப்பு வந்திருக்கிறது.
“விஷாலை பொய்யான குற்றம் சாட்டி லைகா துன்புறுத்தியிருக்கிறது. இதற்கு லைகா 5 லட்சம் அபராதம் கட்ட வேண்டும் “என்று சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
சட்டம் சுட்டதடா …பணம் போனதடா!