திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடந்த தேர்தலின் முடிவுகள் அன்று மாலையில் அறிவிக்கப்பட்டன.
புதிய தலைவராக டைமண்ட் பாபு தேர்வானார்.இவர் மறைந்த பிலிம் நியூஸ் ஆனந்தனின் மகன் என்பது குறிப்பிடத்தகுந்தது. மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசனுக்கு இவர்தான் பி.ஆர்.ஓ
சங்கத்தின் புதிய செயலாளராக யுவராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்
சங்கத்தின் புதிய பொருளாளராக குமரேசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சங்கத்தின் புதிய துணைத் தலைவர்களாக வி.கே.சுந்தரும், கோவிந்தராஜூம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சங்கத்தின் புதிய இணைச் செயலாளர்களாக முத்துராமலிங்கமும், கணேஷ்குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சங்கத்தின் புதிய செயற்குழு உறுப்பினர்களாக, ராஜேஷ், இனியன் ராஜன், ‘கிளாமர்’ சத்யா, ‘திரை நீதி’ செல்வம், சாவித்திரி, வெங்கட், தர்மா, புவன், ஆறுமுகம் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.