புதுச்சேரி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் புஸ்ஸி ஆனந்த் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் தொடர்ந்து மோதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்திருக்கிறது.
விஜய் ரசிகர் மன்ற மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற மூத்த நிர்வாகிகளை தொடர்ந்து புறக்கணித்து வருவதற்கு திருச்சி மாவட்ட தலைமை தளபதி விஜய் ரசிகர் மன்ற மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்ட தலைமை தளபதி விஜய் ரசிகர் மன்ற மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் திருச்சி பத்திரிகையாளர்கள் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்தனர் .
நலத்திட்ட பணிகள் செய்து வருவதால் தங்களை புஸ்ஸி ஆனந்த் மிரட்டி வருவதாகவும் தெரிவித்தனர் மேலும் கடந்த 5 ஆண்டுகளாக விஜய் எந்த மன்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாததற்கு காரணம், விஜய் ரசிகர் மன்ற மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தான் என்றும் குற்றம் சாட்டினர்.
மூத்த நிர்வாகிகளை எந்த ஒரு நல்ல திட்டமும் செய்ய விடாமல் தடுக்கிறார் . மேலும் தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரியிலும் இது தொடர்பான பிரச்சினை நிலவி வருகிறது. கடைக்கோடியில் உள்ள விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப் பட்டு வருவதாகவும் விஜய் பெயரை பயன்படுத்தக்கூடாது என பலர் மிரட்டுவதாகவும் , எங்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணமும் புஸ்ஸி ஆனந்த் தூண்டுதலின் பேரில்தான் நடக்கும் என்கிறார்கள் .
வருகிற 23ஆம் தேதி திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் புஸ்ஸி ஆனந்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்ட உள்ளதாகவும் இது குறித்து நடிகர் விஜய்க்கு எதுவும் தெரியாது எனவே இந்த செய்தியை பார்க்கும் விஜய் இவ்விவகாரம் குறித்து உரிய உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.