முதல் நாள் கலெக்சனே 20 கோடியை பார்க்கிற அந்த உச்ச நடிகருக்கு வெறும் 2 கோடிதான் கலெக்சன் என்றால் எப்படியிருக்கும்?
நொந்து நூடுல்ஸ் ஆகி இருப்பார்.
அக்சய்குமாரின் நிலையும் அந்த மாதிரிதான்.!
அவரது பெல் பாட்டம் படத்துக்கு எல்லா மீடியாவுமே அமோக ஆதரவினை அள்ளிக்கொட்டி விட்டன. உளவுத்துறை அதிகாரியின் உண்மைக்கதை. இந்திரா காந்தி யைப்பற்றிய தொடர்புள்ள கதை.மவுத் டாக் பிரமாதம்! பின் என்ன குறை?
தியேட்டருக்கு மக்கள் வரவில்லை. ஆந்திரா, மும்பை இரண்டிலுமே தியேட்டர்களில் சவக்களை தாண்டவம் ஆடியது என்கிறார்கள்.
மக்கள் கொரானாவுக்கு இன்னமும் பயப்படுகிறார்களா?
அப்படியொன்றும் தெரியவில்லை. மதுச்சாலைகளில் கூட்டம் குறையவில்லை. போக்குவரத்து நெரிசலும் அதிகமாகி இருக்கிறது.
ஆந்திரத்தில் ராஜ ராஜ சோரா என்கிற படத்தின் கதியும் பெல் பாட்டம் மாதிரிதான்.! படத்தின் ரிசல்ட் சூப்பர் .ஆனால் வசூல் ?
பிளாப் படத்துக்கு வருகிற காசு கூட வரவில்லை என்று புலம்புகிறார்கள்.
பத்திரிகையாளர்களும் சிறிய அளவில் இளைஞர்களும் காணப்பட்டார்கள் தவிர வழக்கமாக வருகிற குடும்ப ஆடியன்ஸ் தியேட்டருக்கு வரவில்லை.
மகாராஷ்டிரா,ஆந்திரா இரண்டின் கதியும் இப்படியென்றால் நம் சிங்கார சென்னையின் நிலை என்ன?
தியேட்டரை துப்புரவு செய்கிறார்கள்.சுத்தமாக இருந்தால் நல்லதுதான்.!