பொன்னியின் செல்வன் …அமரர் கல்கியின் அற்புதமான காவியம். வரலாற்று புனைவு. காலம் கடந்தும் பேசப்படுகிற தமிழர் பண்பாடு தழுவிய நாவல்.
“இதெல்லாம் கதையா ?”என விமர்சித்த ஜெயமோகனையே பொன்னியின் செல்வனுக்கு வசனம் எழுத வைத்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.
இது எந்த அளவுக்கு துணை நிற்கப்போகிறது என்பது பொன்னியின் செல்வன் வந்தால் தெரியும்.
இந்த படத்தில் நந்தினி ,மந்தாகினி என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.
பாண்டிச்சேரியில் நடந்த படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படத்தை தற்போது வைரலாகி வருகிறார்கள் இன்டர்நெட் பிரியர்கள்.!
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் நடக்கிறது.
கார்த்தி ,விக்ரம் , சரத்குமார் ,பிரகாஷ் ராஜ் ,ஜெயம்ரவி ,ஜெயராம் ,திரிஷா ,ஐஸ்வர்யா லட்சுமி இன்னும் நிறைய பிரபலங்களை உள்ளடக்கிய படம்தான் பொன்னியின் செல்வன்.
“பொற்காலத்தின் அருமையை “உணர்ந்திருப்பதாக சொல்கிறார் ஐஸ்வர்யா ராய்.