நெல்சன் திலீப்குமார் இயக்கம், விஜய் ,பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கிறார்கள். பீஸ்ட் என ஆங்கில தலைப்பினை சன் தொலைக்காட்சி அறிவித்திருக்கிறது.அனிருத் இசை.முதல் மூன்று கட்ட படப்பிடிப்பினை கடந்து விட்ட இந்தப்படம் நான்காம் கட்டத்தை எதிர் நோக்கியிருக்கிறது.
செப்டம்பர் முதல் நாளில் 4 ஆம் கட்டப் படப் பிடிப்பு. அந்த மாதத்தின் 20 ஆவது நாளில் டெல்லி சென்று அங்கு நான்கு நாட்கள் படப்பிடிப்பு.
இந்த படத்தின் வில்லன் செல்வராகவன். தனுஷின் அண்ணன் .இந்த வகையான வில்லனை பார்த்திருக்கவே முடியாது.அவ்வளவு கொடூரமான கேரக்டர் என்கிறார்கள்.