சமந்தாவை பற்றி எக்கச்சக்கமான செய்திகள் கட்டியேற இப்போது புதிதாக இன்னொரு அறிவிப்பு இணைந்து கொண்டிருக்கிறது.
“இன்னும் சிறிது காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கப்போவதாக” சமந்தா அறிவித்திருக்கிறார்.
இது பத்தாதா, நம்ம ஆட்களுக்கு?
“இது நிரந்தரமான ஓய்வு பெறுவதற்கான முன்னோட்டம்”என சிலர் கண்ணோட்டம் எழுதுகிறார்கள்.
“நான் ஒரு சில மாதங்களுக்குத்தான் லீவு போட்டிருக்கிறேன். சமந்தாவின் 3.0 பதிப்பை அடுத்துப் பார்க்கப்போகிறீர்கள்”என்பதாக சமந்தா பதிவிட்டிருக்கிறார்.
அந்த ஒரு சில மாத ஓய்வு எதற்காக என்பதுதான் நம்ம ஆட்களின் கேள்வி.!
“கரு தரிப்பதற்கான காலமா?”
அப்படியெல்லாம் தெரியல.
“காமடி சீன்ல நடிக்கிறது ரொம்பவும் கஷ்டமா இருக்கு. அதுக்கு நான் தயாராகணும்.” என்கிறார்.