சென்னையில் வாக்குரிமை உள்ள திரையுலக பிரபலங்களில் பெரும்பாலானோர் தவறாமல் வாக்களித்தனர். வெளியூர்களில் வாக்குரிமை உள்ள நடிகர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குப் போய் வாக்களித்தனர். மதுரையில் வாக்குரிமை உள்ள நடிகர் – இயக்குநர் சசிகுமார் கொட்டும் மழையிலும் தனது ஜனநாயகக் கடமையைச் செய்ததோடு, வாக்குரிமை உள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். திரையுலகப் பிரபலங்கள் இந்த அளவுக்கு திரண்டு வாக்குச் சாவடிக்கு வந்தது இந்த ஆண்டுதான் என்பது குறிப்பிடத்தக்கது.தேர்தலில் முதல் நபராக வந்து வாக்களித்தார் ரஜினி. அதேபோல நடிகர் அஜீத்,நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடியில் விஜய் வாக்களித்தார். கமல் ஹாஸன், தனது மகள் மற்றும் நடிகை கவுதமியுடன் வந்து வாக்களித்தார். நடிகர்கள் சிவகுமார், கார்த்தி, விஷால், ஆர்யா, ஜீவா, ராகவா லாரன்ஸ், இமான் அண்ணாச்சி, பிரசன்னா, நடிகைகள் மீனா, த்ரிஷா, நமிதா, ரம்பா என ஏராளமானோர் இன்று காலையிலேயே பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்