கமல் ஷங்கர் – லைகா பட நிறுவனம் இடையேயான விவகாரம் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே போவதால் 60 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள இந்தியன்-2 திரைப்படம் வருமா,வராதா என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டு வருகிறது
இந்நிலையில்,இப்பட த்தின் நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் இந்தியன்-2 விவகாரத்தில் தலையிட்டு, அமைதியான முறையில் பிரச்சனையை பேசித் தீர்ப்பதற்காக இரு தரப்பினர் இடையே நட்பு ரீதியாக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளாராம்.
இப் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டால் விக்ரம் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் இந்தியன் 2 படத்தின்படப்பிடிப்பை தொடங்கி விடலாம் படப்பிடிப்புக்கான தேதிகளை உடனடியாக ஒதுக்கித்தருவதாகவும் இருதரப்புக்கும் கமல் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.