தேமுதிகபொதுச் செயலாளர் விஜயகாந்த் இன்று காலை சிகிச்சைக்காக சென்னையில் இருந்து துபாய் வழியாக அமெரிக்கா செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.
அவருடன் அவரது இளையமகன் சண்முகபாண்டியன் உள்பட 4 பேர் சென்றனர்.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தனது உடல்நலக்குறைவு காரணமாக முன்பு போல் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். சிகிச்சைக்காக அவர் அவ்வப்போது வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லப்படும் விஜயகாந்த் கடந்த 2019 ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.
இதையடுத்து சென்னை திரும்பிய அவர் மருத்துவ பரிசோதனைக்காக அடிக்கடி தனியார் மருத்துவமனைக்கு சென்று ஊட்டல் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, விஜயகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.
சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய விஜயகாந்த் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், விஜயகாந்த் விரைவில் உ டல் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டு தேதி குறிப்பிடப்படாமல் இருந்தது.
இந்நிலையில்,இன்று அதிகாலை 4.15 மணிக்கு சென்னையில் இருந்து துபாய் வழியாக அமெரிக்கா செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் . விஜயகாந்த் செல்ல உள்ளதாக அவரது பெயரில் டிக்கெட் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இதனால்,விஜய்காந்த் இன்று அதிகாலை 2.30 மணிக்கே அவரது வருகைக்காக கட்சியினர் காத்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை. இந்நிலையில்,விஜயகாந்த் அமெரிக்க பயணத்தின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு இன்று காலை 9.50 மணிக்கு அவர் சென்னையில் இருந்து துபாய் வழியாக அமெரிக்கா செல்லும் எமிரேட் விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.
அவருடன் அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் உதவியாளர்கள் குமார்,.சோமு ஆகியோரும் சென்றனர்.
முன்னதாக இன்று காலை 8 மணிக்கு விஜயகாந்த் வீல்சேரில் விமான நிலையத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். சிகிச்சைக்கு பின் . அமெரிக்காவில் சில நாட்கள் ஓய்வெடுத்து அதன் பிறகு சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.