நந்தா, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து மீண்டும் இயக்குனர் பாலா-நடிகர் சூர்யா இணைகிறது.இப் படத்தை சூர்யா- ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இதில் அதர்வா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், சூர்யா இதில் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவில் உருவாக உள்ள இப் படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.