உலகநாயகன் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே இப்படத்தின் டீசரை வெளியிட்டு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இதையடுத்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி கிடக்கிறது .இந்நிலையில்,அட்லி தனது அடுத்த படத்தை கமலின் விக்ரம் பட பாணியிலேயே தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்க உள்ள இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.இந்நிலையில், ’ஜவான்’ என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே டீசர் தயாராகி விட்டதாம் .
விரைவில் படத்தலைப்புடன் கூடிய டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுவிடும் என்கிறது பாலிவுட் வட்டாரம். ஏஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தில் ஷாருக்கான் வில்லன் மற்றும் ஹீரோ என இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் ஒரு கேரக்டருக்கு நயன்தாரா ஜோடி என்றும் ஏற்கனவே தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது . இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை மற்றும் துபாயில் நடத்தப்படவுள்ளது.