கடந்த சீசனை போல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனும் வருகிற அக்டோபர் மாதம் தான் தொடங்கப்பட உள்ளது. தற்போது இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் மிக மும்முரமாக நடந்து வருகிறது. வழக்கம் போலவே இந்நிகழ்ச்சியை உலகநாயகனே தொகுத்து வழங்க உள்ளார்.
இந்நிலையில், ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சிக்கான முதல் புரமோ வீடியோவை உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். கமல்ஹாசன் தனது விக்ரம் பட பாணியில் மிகவும் கம்பீரமாக ‘ஆரம்பிக்கலாமா?…’ என மிரட்டும் தொனியில் ஆரம்பித்து, புன்னகையை தவழ விடும் அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக கலந்து கொள்பவர்களின் பட்டியலில்,பிரபல நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன்,மைனா நந்தினி, ஆகியோரின் பெயர்களும், நடிகர்கள் எம்.எஸ். பாஸ்கர், கனி, ஜிபி முத்து உள்ளிட்ட வர்களின் பெயர்கள் இடம் பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.