‘சினிமாஸ்’ ஸ்டுடியோவுடன்,’சீண்டோவா’ பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள புதிய படம்,பிரண்ட்ஷிப். இப்படத்தின் மூலம் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கிறார்.இவர்களுடன் அர்ஜுன்,சதிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை இயக்கியுள்ள இரட்டை இயக்குநர்கள் ஜான் பால்ராஜ் ,ஷாம் சூர்யா கூறுகையில்,நட்பை மையமாக வைத்து எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் , அப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும்.இது நாலுபசங்க, ஒரு பொண்ணு ஆகியோருக்கு இடையே இருக்கும் நட்பை சொல்லும் படம்.
பொதுவா மெக்கானிக் என்ஜீனியரிங் படிப்புன்னாலே பசங்க தான் அதிகம் இருப்பாங்க இவங்க மத்தியில் ஒரு பொண்ணு வந்து இணைகிறார். அவர்களுக்கு மத்தியில் என்ன நடக்கிறது என்பது தான் இப்படத்தின் கதை இப்படத்தில் ஹீரோ ஹீரோயின் என யாரும் கிடையாது கதை தான் ஹீரோ.லவ் கிடையாது நட்பு இருக்கும் அர்ஜுன் சார் கேரக்டர் இதில் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது.தேசிய அளவிலான ஒரு மெசேஜ் இப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
இதில் லாஸ்லியா சொந்தக்குரலில் டப்பிங் பேசியுள்ளது மட்டுமில்லாமல், ‘தனியா நான் தவிச்சுருந்தேன்’ என்ற பாடலையும் பாடியுள்ளார்.படம் பாத்துட்டு வெளியே வரும்போது,ஒரு பெண்ணிடம் இப்படியும் பழகலாம் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் என்கிறார்கள் .தணிக்கை குழுவினரின் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.