‘வெந்து தணிந்தது காடு’ புரட்சிகரமான தலைப்பு.
கவுதம் மேனன் இயக்கும் இந்தப்படத்தில் சிலம்பரசன் நடிக்கிறார். இந்தப்படத்துக்குப் பிறகு சிலம்பரசன் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ள படம் “பத்து தல’
பொதுவாக பத்துத்தலை என்றால் இலங்கை வேந்தன் இராவணேஸ்வரனை குறிக்கும் .தமிழ் மாமன்னன்.
‘சில்லுன்னு ஒரு காதல் ‘படத்தை இயக்கிய கிருஷ்ணாதான் பத்து தல படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் கவுதம் மேனனும் நடிக்கிறார். துடிப்பான காதல் அரசன் சிலம்பரசன் ,அமுக்கமான வில்லன் கவுதம் மேனன் இருவரும் இணையும் இந்த படத்தின் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
சில காலம் நிறுத்தப்பட்டிருந்த படப்பிடிப்பு தற்போது தொடங்கி இருக்கிறது.
இசைப்பது ஏஆர் ரகுமான்.