போதையும் சினிமாவும் பிரித்துப்பார்க்க இயலாதவை.
அங்கே இருக்கிறவர்கள் 100க்கு 100 உத்தமர்கள் என அவர்களாலேயே வாதிட முடியாது.
எப்படி அரசியல் என்றால் அதில் ஊழலும் கலந்துதான் இருக்கும் என்பதைப்போல போதையும் சினிமாவில் ஒரு அங்கமே.!
அந்த பாட்டில் போதையுடன் பவுடர் போதையும் கலக்கிறபோதுதான் ஆபத்து -விபத்து ஏற்படுகிறது.
அண்டை மாநிலமான ஆந்திரத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகம் என்கிற குற்றச்சாட்டு தொடர்கதையாக நீண்டது.
விளைவு ,சோதனை.!
2017 -ஆம் ஆண்டு நடந்த சோதனையில் 30 லட்சம் ரூபா மதிப்புள்ள பொருட்கள் மாட்டின. வழக்குகள் பதிவாகின.
நடிகை சார்மியின் நட்பு வட்டமான இயக்குநர் பூரி ஜெகநாத்,கேமராமேன் ஷ்யாம் கே.நாயுடு ,நடிகர்கள் தருண், ரவிதேஜா ,நவ்தீப் ,நடிகைகள் சார்மி ,முமைத்கான் ,ராணா உள்ளிட்ட டஜன் ஆட்கள் சிக்கினார்கள்.
இவர்களை விசாரிக்கிறவகையில் விசாரித்ததில் மேலும் பலர் மாட்டினார்கள்.30 பேர் கைதாகினர். வழக்கில் சில கோடி ரூபாய்கள் ஹவாலா என்பது தெளிவாகியது.
இது தொடர்பாக 12 பேருக்கு சம்மன் அனுப்பப் பட்டது.
சார்மி விசாரிக்கப்பட்டார். பின்னர் ரகுல் பிரீத் சிங்கிடம் விசாரணை.இவரிடம் மட்டும் துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது.அப்படி என்ன இவர் மீது மட்டும் கொள்ளை அக்கறை?
மாட்டிக்கிட்டா மன்னாதி மன்னனும் மண்டியிட்டுத்தான் ஆகணும்.!