தலைவி படக்குழுவினர் நடிகை சமந்தாவுக்கு சிறப்பு பரிசு வழங்கி அதிர்ச்சி அளித்துள்ளனர்.
தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்திருப்பவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் .இவருக்காக அசல் காஞ்சிபுரம் பட்டு சேலைகளையே படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு காஞ்சிபுரம் பட்டு என்றால் மிகவும் பிடிக்கும் என்பதே அதற்கு காரணம்.
இயக்குநர் ஏ எல் விஜய் ,தயாரிப்பாளர் விஷ்ணு இந்தூரி இருவரும் அதிக அளவில் பட்டு சேலைகளை வரவழைத்திருக்கிறார்கள். சமுதாயத்தில் சக்தி வாய்ந்த பெண்மணிகளை தேர்வு செய்து அவர்களுக்கு தலைவி பரிசாக வழங்குவதற்காக அதிக அளவில் பட்டு புடவைகளை வாங்கியிருக்கிறார்கள்.
இவர்களின் பட்டியலில் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்.
முதலாவது பட்டு புடவையை பெறுகிற வாய்ப்பு நடிகை சமந்தாவுக்கு கிடைத்திருக்கிறது.
ஊழல் சேலை என்கிற அடை மொழி வாராதிருந்தால் சரி.!