இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் திரையுலக பிரபலங்கள் பலரும் விநாயகர் சதூர்த்தி வாழ்த்து தெரிவித்து தங்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில்,நடிகர் ரஜினிகாந்தின் மூத்தமகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நிஜ யானையிடம் ஆசிர்வாதம் வாங்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு,’கணபதி ப ப்பா மோரியா’ நல்ல தொடக்கங்களுக்காக வாழ்த்துங்கள் என பதிவிட்டு, ரசிகர்களுக்கு விநாயக சதுர்த்தி வாழ்த்தை தெரிவித்துள்ளார்.இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.