இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் சூரஜ் பாட்டியாவும் ஒருவர். பல பரிசுகளை வாங்கியவர்.
மைனே பியார் கியா ,ஹம் ஆப்கே ஹைன் கவுன் ,ஹம சாத் சாத் ஹைன் விவாக் போன்ற சிறந்த படங்களை கொடுத்தவர்.
தற்காலத்துக்கேற்ப கதையை தேர்வு செய்து மிகவும் பிரமாண்டமாக படமாக தயாரிக்க இருக்கிறார்.அக்டோபரில் படப்பிடிப்பு ஆரம்பம்.
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ,சரிகா (கமல்ஹாசன்)பொம்மன் இராணி ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள் . உலகநாயகன் கமல்ஹாசனை விட்டுப் பிரிந்த பின்னர் திரை உலகை விட்டு விலகியே இருந்தவர் சரிகா என்பது குறிப்பிடத்தகுந்தது.
பாலிவுட் வட்டாரத்தில் தற்போது இதுதான் பேச்சாக இருக்கிறது.
அமிதாப் ,டானி டென் சோங்பா ,அனுபம்கெர் ,பொம்மன் இராணி ,ஆகிய நான்கு சீனியர் சிட்டிசன்களுடன் கதை நேபாளத்தில் தொடங்குகிறது.இந்த நான்கு நாண்பர்களின் கதையில் சரிகா ,நீனா குப்தா, பரினீதி சோப்ரா ஆகிய மூத்த நடிகைகளும் நடிக்கிறார்கள் .40 நாள் செடியூல் .பின்னர் மும்பை டெல்லி ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடந்து முடிவடைகிறது.
இவர்களது கேரக்டர்களை பற்றி முழுமையாக தெரிவிக்கப்படவில்லை. மூடி வைத்திருக்கிறார்கள்.