விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படம் சட்டவிரோதமாக பேருந்தில் ஒளிப்பரப்பாகியதை விஜய் ரசிகர் ஒருவர் கொடுத்த தகவலின்படியும், விஷாலின் அதிரடி நடவடிக்கையாலும் அந்த பேருந்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார் இந்நிலையில் ‘தெறி’யை அடுத்து மற்றொரு தனியார் பேருந்து ஒன்றில் உதயநிதி ஸ்டாலினின் ‘மனிதன்’ திரைப்படம் ஓடுவதாக வந்த தகவலின் அடிப்படையில் வீடியோ பைரஸி காவல் கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி உத்தரவின்படி, காவல்துறை ஆய்வாளர்கள் மகேந்திரன் மற்றும் நந்தகுமார் ஆகியோர் இன்று காலை மதுரவாயல் பகுதியில் பஸ்சைi மடக்கி பிடித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது