நடிகர் விஷால் சென்ற ஆண்டு மதுரவாயிலில் உள்ள ஒரு பள்ளி விழாவுக்கு சென்றிருந்த போது அங்கு கல்வி பயிலும் மாணவர்களில் 12ஆம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுப்பவர்களை கல்லூரியில் தானே படிக்க வைப்பதாக கூறியிருந்தார். அதன்படி அப்பள்ளியை சேர்ந்த தற்போது 12ஆம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள அப்பள்ளி மாணவர்களான பத்மப்ரியா ( 1137 / 1200 ) , புவனேஸ்வரி ( 11280/1200) , பி.சக்தி ( 1082 /1200) ஆகியோரை நடிகர் விஷால் அவருடைய தேவி அறக்கட்டளையின் மூலம் படிக்கவைக்கவுள்ளார்.
இது போன்று நடிகர் விஷால் தேவி அறக்கட்டளையின் மூலம் பல்வேறு மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிறார்.
இதை பற்றி நடிகர் விஷால் பேசும் போது , 12ஆம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றுள்ள இந்த மாணவர்களை படிக்க வைப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இது போன்ற மேலும் பல மாணவர்களை படிக்கவைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.