கிட்டத்தட்ட 4 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு நகைச்சுவை நடிகர் வடிவேலு சுராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இப் படத்திற்கு ’நாய் சேகர்’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இப்படத்தலைப்பு ஏற்கனவே ஏஜிஎஸ் நிறுவனம் சதீஷ் நடிக்கும் படத்திற்காக நாய் சேகர் என்ற படத்தலைப்பை பதிவு செய்திருப்பதால் இத்தலைப்பு கிடைப்பதில் சிக்கல் உருவானது. மேலும் இப்படத்தலைப்பு குறித்து வடிவேலு தரப்பினர் ஏஜிஎஸ் நிறுவனத்திடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால்,அப் படநிறுவனம் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டது இதையடுத்து அதிரடியாக வடிவேலு-சுராஜ் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்ற தலைப்பை சூட்ட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.இப்போதைக்கு நாய் சேகர் படத்தலைப்பு பஞ்சாயத்து முடிவுக்கு வராது என்கிறார்கள்.