தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகும் பிரபல நடிகர்களின் படங்கள் ஏதோ ஒரு வகையில் ஏதாவது ஒரு பிரச்சனையை எதிர்கொள்ள நேர்கிறது. இதற்கு சமீபத்திய பல படங்களை உதாரணமாக சொல்லலாம். அந்த வகையில், தனுஷ்-அமீராதஸ்தர் நடித்த ‘அனேகன்’ படத்துக்கு தடை கோரி சலவைத் தொழிலாளர்கள் போலீசில் புகார் மனு! . மதுரை வண்டியூரைச் சேர்ந்த வக்கீல் சாலின்மணி, கே.கே.நகர் வக்கீல் ரமேஷ் மற்றும் 50-க்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர்கள் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.அந்த மனுவில்,கூறப்பட்டுள்ளதாவது, “கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அனேகன் திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அந்த படத்தில் சலவைத் தொழிலாளர் சமூகத்தை சேர்ந்த பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக வசனங்கள் இடம் பெற்றுள்ளன. எனவே அந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிட தடை விதிக்க வேண்டும். படத்தில் இழிவான வசனங்கள் இடம்பெறச் செய்த இயக்குனர் கே.வி.ஆனந்த்,மற்றும் அதை பேசி நடித்த நடிகர்கள் ஜெகன், தனுஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கூறப்பட்டுள்ளது. இச் சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.