காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால் நாகார்ஜுனாவின் படத்தில் இருந்து விலகி விட்டார்.
இந்தியன் 2 வில் நடிப்பாரா என்பது சந்தேகமே!
இயக்குநர் சங்கருக்கும் லைகாவுக்கும் இடையேயான வில்லங்கம் எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியவில்லை. அதைப்பற்றிய கவலை இருதரப்பினருக்கும் இல்லை என்பது உண்மைதான்.!
வில்லங்கம் முடிவுக்கு வந்தாலும் காஜல் நடிப்பாரா?
மாட்டார். ! கைக்குழந்தையை வைத்துக்கொண்டு இந்தியன் மாதிரியான படங்களில் நடிப்பது ரிஸ்க் என்பதால் விலகிவிடுவார் என்றே சொல்கிறார்கள்.
சரி மேட்டருக்கு வருவோம்.
நாகார்ஜூனாவின் பேய்ப்படத்துக்கு புதிய நாயகியை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
திரிஷாவா,இலியானாவா?
திரிஷா ஏற்கனவே நாகார்ஜுனாவுடன் கிங்க் என்கிற படத்தில் நடித்திருக்கிறார்.ஆனால் இலியானாவுக்கு அத்தகைய முன் அனுபவம் இல்லை.. இதனால் வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கிற இலியானாவுக்கு பேயாக நடிக்கிற புண்ணியம் கிடைக்கலாமாம் என எதிர்பார்க்கிறார்கள்.
திரிஷா ,அல்லது இலியானா இருவரில் யாருக்கு வாய்ப்பு?
கிடைக்காது ,பாலிவுட் ஆர்ட்டிஸ்ட் யாருக்காவது அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள்.