மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் தற்போது பரத் நடிப்பில் வடிவுடையான் இயக்கத்தில், அம்ரீஷ் இசையில் “ பொட்டு “ படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்கள்.
அதை தொடர்ந்து சாட்டை படத்தின் இரண்டாம் பாகமான “ சாட்டை – 2 “ படத்தையும் தயாரிக்கிறார்கள். ஆடுகளம், பொல்லாதவன் போன்ற படங்களில் நடித்த கிஷோர் மற்றும் தம்பி ராமைய்யா இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
பல இயக்குனர்களிடம் உதவியாளராக இருந்த கெளதம் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் துவக்க விழா ஜூன் மாதம் நடைபெற உள்ளது.