பானை செய்வதென்றாலும் அதற்கேற்ற மண்ணு வேணும்ல. பீச்லதான் கொட்டிக் கிடக்குதுன்னு அள்ளிட்டு வந்து உருட்டிப்பார்க்க முடியுமா? சக்கரத்தில் வச்சு சுத்தும்போதே சிதறிப்போகாதா?
அது மாதிரி வயசும் வாலிபமும் இருக்கிறபோது கல்யாணம் செய்து கொண்டால்தான் அது பருவத்தே செய்த பயிர் மாதிரி.! பலன் இருக்கும்.!கிடைக்கும்.!!
இப்ப நடிகை அனுஷ்காவுக்கு வயது 39.!
சராசரி வயதில் பாதியை கடந்தாகிவிட்டது. கல்யாணம் என்பது வதந்திகளின் வாய்களில் மெல்லப்படுகிறதே தவிர கார்டுகளில் அச்சேறவில்லை.
ஜெகநாத் குருஜி என்பவர் பெயர் வாங்கிய ஜோதிடர். கணித்து சொன்னால் 90 சதம் பழுதில்லை என்று ஆந்திரத்து பெரும்புள்ளிகள் திரை உலகம் உள்ளிட்ட உச்ச நடிகர்கள் நம்புகிறார்கள்.
அனுஷ்காவின் ஜாதகம் என்ன சொல்கிறது ,குரு பார்வை குறுகுறுக்கிறதா இல்லையா? கோள்கள் எங்கே இருக்கின்றன.கொஞ்சம் கணித்து சொல்லுங்கள்!
2023 ம் ஆண்டுக்குள் அவருக்கு கல்யாணம் நடந்து விடவேண்டும். அதுவும் 2023-ல் முதல் ஆறுமாதம் வரை எந்த எக்ஸ்பைரி டேட் இருக்கிறது என்கிறார்.!அதாவது 2023 -ஜூனுக்குள் திரை உலகம் தொடர்பில்லாத ஒருவருக்கு வாழ்க்கைப்படுவார் என்கிறார் குருஜி.!!!
பிரபாஷுடன் திருமணம் என்கிற வதந்தியில் வாழ்ந்தே இன்று வரை வந்து விட்டார். பிரபாஷுக்கும் இப்ப வயது 41.இவரும் அன் மேரிடுதான்.
துபாயில் உள்ள பிஸினஸ்மேனுடன் கல்யாணம் நடக்கப்போகிறது என்று கதைத்துப் பார்த்ததும் கனவுதான்! உடல் எடையை குறைத்த பின்னர்தான் கல்யாணம் என்கிற முடிவில் சிலர் பீதியை கிளப்பிவிட்டு விட்டார்கள் .ஆக இத்தனையையும் கடந்து ஜோதிடரின் அருள் வாக்கில் வந்து நிற்கிறது அனுஷ்காவின் கல்யாண கனவு.!