குப்பை மேட்டில் போய் நின்னா சந்தனமா மணக்கும் என்கிற மாதிரி ஆகிவிட்டது மந்திரியும் பவர் ஸ்டாரும் போட்டுக்கொள்கிற சண்டை!
நம்ம ஊர்ல இல்லிங்கோ….பக்கத்து மாநிலத்தில !
அங்க பவர் ஸ்டார் பவன் கல்யாண். நடிகர் சிரஞ்சீவியின் ரத்தத்தின் ரத்தம்.
இவருடன் முண்டா தட்டி முஷ்டி காட்டிய பெருமகனார் பெர்னி நானி . ஒய் எஸ்.ஆர் .காங்கிரஸ் மந்திரி சபையில் ஒரு மந்திரி.!
இந்த இருவரும் முட்டிக்கொள்ள எது காரணம்?
ஆன் லைனில் சினிமா டிக்கெட்டுகளை விற்பதற்காக ஒய் எஸ் ஆர் .ஜெகன் மோகன் அமைச்சரவை முனைப்பு காட்டிக்கொண்டிருக்கிறது.
இது கூடாது என்று உச்ச நட்சத்திரங்கள் ஒன்று கூடி பட்டாசு கொளுத்துகிறார்கள்.
தியேட்டரில் தங்களின் படம் ரிலீஸ் ஆகிற முதல் நாளிலிருந்து 3 நாட்கள் ‘பெனிபிட் ஷோ’நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நட்சத்திரங்கள் அரசாங்கத்தை வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த ஷோவில் ஒரு டிக்கெட்டின் விலை 4 ஆயிரம் என கல்லா கட்டுமாம். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இந்த மாதிரியாக பகல் கொள்ளை நடப்பதில்லை.
தமிழ்நாட்டிலேயே ரூ 1000 ,2000 வரைதான் ரஜினி ,விஜய் பட ரேஞ்சு இருக்கிறபோது ஆந்திராவில் நாலாயிரம் என்பது டூ மச் இல்லியா?
அந்த கொள்ளையை தடுப்பதற்குத்தான் ஜெகன் மோகன் ரெட்டி அரசு ஆன் லைன் டிக்கெட் விற்பனையை கொண்டு வருகிறது.
ஆனால் உச்ச நடிகர்கள் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்.
ஜூனியர் என்.டி.ஆர் ,பாலகிருஷ்ணா ,அல்லு அரவிந்த் ,மகேஷ் பாபு ,பிரபாஸ் உள்ளிட்ட இந்த ‘முற்போக்கு அணிக்கு ‘தலைவர் பவன் கல்யாண்.
இதை நடிகர் பவன் கண்டித்து “அவர் நாய் ,குப்பை” என்று சொல்ல ,மந்திரி மட்டும் சளைத்தவரா “போய்யா பன்னி ” என்று சொல்லி விட்டார்.
சிரஞ்சீவியின் சாம்ராஜ்யத்தை தன்னுடைய வசம் கொண்டு வருவதற்காக சிரஞ்சீவிக்கு ராஜ்ய சபா சீட் தருவதற்கு ஜெகன் மோகன் ரெட்டி ரெடி !?
ஆனால் அப்படி அண்ணனுக்கு எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக சூட்டுக்கோலை சிரஞ்சீவியின் சீட்டில் மறைத்து வைக்கப்பார்க்கிறார் தம்பி பவன் கல்யாண் .இப்படியும் ஒரு டிராமா சைடில் நடக்கிறது.
நல்லதொரு குடும்பம்யா !