இவரது ராசியோ என்னவோ….காதலுக்கும் இவருக்கும் வெகுதூரம் என்கிறது கோடம்பாக்கம் .
நடிகை சமந்தா தனது காதல் கணவரை விட்டு பிரிந்து விட்டார்.
நாக சைதன்யாவும் சமந்தாவும் பரஸ்பர சம்மதம் தெரிவித்து கணவன் -மனைவி பந்தத்தை முறித்துக் கொள்கிறார்கள்.
அக்கினேனி குடும்பம் கவுரவம் மிக்கது.திரை உலகத்தில் இவர்களுக்கென மரியாதை இருக்கிறது.இந்த குடும்பத்தில் வாக்கப்பட்டதால் சமந்தாவுக்கு தனி கவுரவம் வந்தது.
ஆனால் இவர் படங்களில் ,வெப் சீரியல்களில் எல்லை கடந்து கவர்ச்சியை வெளிப்படுத்தியதை குடும்பத்தினர் விரும்பவில்லை. இதனால் கணவன் -மனைவி இருவரிடையில் விரிசல் விழுந்தது. தற்போது அது இரு கூறாக உடைந்து விட்டது.
இது தொடர்பாக சமந்தா சொல்லியிருப்பதாவது;
“நீண்ட யோசனைக்குப் பின்னர், நானும் நாகசைதன்யாவும் கணவன், மனைவியாக வாழப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். பத்தாண்டுகளுக்கும் மேலாக எங்களுக்குள் நட்பு இருந்தது. அதை நாங்கள் பெரும் பொக்கிஷமாகக் கருதுகிறோம். அந்த நட்புதான் எங்கள் உறவுக்கு அடிப்படை. இனியும் கூட, எங்களுக்குள் அந்த நட்பின் நிமித்தமான பிரத்யேக பிணைப்பு தொடரும்.
இந்தக் கடுமையான காலகட்டத்தில் நண்பர்கள், நலன் விரும்பிகள், ஊடகங்கள் எங்களை ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். எங்களின் தனிநபர் சுதந்திரத்தைக் கருத்தில் கொள்ள வேண்டுகிறோம். அனைவருக்கும் நன்றி.”என கூறியிருக்கிறார்.
இழப்பீடு எதுவும் கிடைக்குமா?