“உருகுதே மருகுதே ,உன்னைப் பார்த்ததாலே ” என்று கடலோரமண்ணில் கட்டிப்புரண்டு காதல் பாட்டு பாடவேண்டியவர்கள், சொட்டுச்சொட்டாக கண்ணீர் சிந்தியபடி “கோவிந்தா ,கோவிந்தா “என ரோட்டில் புரண்டழுதால் ஊரு உச்சு கொட்டத்தான் செய்யும்.
“சக்களத்தி சாஞ்சாடா “என்று முதல் மனைவி சங்கீதம் பாடுவாள். அது மாதிரி ஆகிவிட்டது நடிகை சமந்தாவின் சமாச்சாரமும்.!
இவரது முதல் காதலர் ஜாடை பேசி “வாழ்ந்திட்டியா நீ?” என்று எக்காளமிடுவது அந்தப்பொண்ணுக்கு கேட்டுச்சா இல்லையான்னு தெரியல.!
ஒருகாலத்தில் ஜோடியாக வாழ்ந்தவர்கள் சித்தார்த்தும் சமந்தாவும்.! காதலர்கள் என ஊடகங்களால் அடையாளம் காட்டப்பட்டார்கள். அதை அவர்கள் மறுக்கவும் இல்லை.
மணவாழ்க்கைக்கு தோஷம் தடையாக இருக்கும் என்று நம்பிய இந்த ஜோடி ராகு கேது கோவிலான (2013 ம் ஆண்டு) காளகஸ்தி கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தியது.
ஆனால் ‘ஜபர்தஸ்த்’என்கிற தெலுங்கு படத்தில் ஜனித்த அன்பு , காளகஸ்தி கோவில்வரை சென்று பரிதாபமுடன் பட்டுப்போனது.
காரணம் சொல்லாமலேயே இருவரும் டாட்டா பய் பய் சொல்லிவிட்டார்கள்.
புதுடெல்லியில் பக்கத்து வீட்டுப் பெண்ணான மேகனாவை காதலித்து 2003-ல் சித்தார்த் திருமணம் செய்து கொண்டார் .2007-ல் மணவிலக்கு.!
சமந்தாவும் சளைக்கவில்லை.2017-ல் நாகசைதன்யாவுடன் காதல் திருமணம் நடந்தது. 2021 -ல் அந்த இணைப்புக்கு மங்களம் பாடியிருக்கிறார்.
தம்பதிகளாக வாழ்ந்த இந்த இரண்டு ஜோடிகளுமே சொல்லி வைத்தாற்போல நான்காண்டு அனுபவத்துடன் பிரிந்து விட்டன.
சரி,சித்தார்த் தற்போது டிவிட்டரில் கருத்து சொல்லி இருக்கிறார்.
அவர் யாரைச் சொல்கிறார் என்பது தெரிகிறதா,தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.!!
“நான் பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொண்ட முதல் பாடம் ‘ ஏமாற்றுப்பேர்வழிகள் செழிப்பாக வாழமுடியாது.முன்னேற முடியாது.”