உடன்பிறப்பே…..அமேசான் ஒரிஜினலுக்காக ஜோதிகா-சூர்யா சிவகுமார் இணைந்து வழங்குகிற படம். இரா.சரவணன் இயக்கியிருக்கிறார்.
அண்ணன் -கணவனுக்கு இடையில் பாசப்போராட்டம் நடத்துகிற வேறொரு பாசமலராக இருக்கிறது. அந்த பாசமிகு சகோதரி ஜோதிகா.
“எம்புருஷன் சட்டத்த நம்புறாரு…எங்கண்ணன் சத்யத்தை நம்புறாரு.நான் ரெண்டும் ஒன்னுதான்னு சொல்றேன்” என்று ஜோதிகா சொல்வதை வைத்துப்பார்த்தால் குடும்பத்தில் எதோ ஒருவித பூசல் இருக்கிறது. அது பெரிய விளைவை ஏற்படுத்தக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு நமக்குள் ஏற்படுகிறது.
முன்னோட்டத்தில் கணவன் சமுத்திரக்கனி மைத்துனர் சசிகுமாரிடம் கொந்தளிப்புடன் “நீங்க பண்ற பாவத்த எல்லாம் என் பிள்ளைக மேல ஏன் ஏறக்குறீங்க ?”என்று குமுறுகிறபோது பிரச்னையின் வலி. எப்படா படம் வரும் என ஏங்க வைக்கிறது.
இன்னொரு புறம் நரேன் எரிமலையாக வெடிக்கிறார்.”என் சொத்து பத்த வித்தாவது அந்த குடும்பத்தை வேரறுப்பேன் “என்கிறார். யார் இவர்?எதற்காக பெருஞ்சினம்? படம் வந்தால்தான் தெரியும்!
ஜோதிகா இந்த படத்துக்கு பெரிய ப்ளசாக இருப்பார் என்பதை அவரது முகமே சொல்லி விடுகிறது. அசல் கிராமத்து தமிழ்ப்பொண்ணு. நடு வகிடு எடுத்து வாரப்பட்ட கூந்தல். அதில் சில நரை முடி ! மங்கள குங்குமம்.சற்று மேலே சிறு தட்டையாக சாமி துண்ணூறு ! இரட்டை மூக்குத்தி.என்னே அழகு.,என்னே அழகு.!
“எத்தன நாளைக்கு புருசனுக்கு பயந்துக்கிட்டு இருப்பே ?உங்கண்ணன்கிட்ட நீயாவது பேசு!” என்று அந்த தண்டட்டி கிழவி சொன்னதும் ,முகத்தை சற்று தாழ்த்தி “நான் என்புருஷனுக்கு பயந்தேன்..நீ பாத்தே?” என ஜோதிகா கேட்கிற பாங்கு இருக்கிறதே ….ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ!!
உடன்பிறப்பே…..முன்னோட்டம் சிறப்பு .சரவணா….( நான் சூர்யாவை சொல்லலே !) காட்டுப்பா படத்த !