பாட்டியா இருந்தாலும் குனிஞ்சி கூட்டுனாலே நம்ம பயலுக கண்ணு இரையத் தேடுகிற இந்த காலத்தில ,ஏம்மா வித்யூலேகா நம்ம ரேஞ்சுக்கு இந்த பிகினி தேவையா?
கடுப்பாகிட்டாங்க போல பசங்க.! “எப்பம்மா டைவர்ஸ்?”னு ட்ரோல் !!
அடப்பாவிகளா !கல்யாணமாகி ஹனிமூன் போன பொண்ணுகிட்ட கேட்கிற கேள்வியாப்பா இது! மாலத்தீவு அம்சமான தீவு. காய கல்பம் இல்லாமலேயே அங்கு வீசுகிற காற்றிலேயே மன்மத அம்புகள் இணைந்து வரும். அங்கு எல்லா நடிகைகளைப்போல வித்யூ லேகாவும் பிகினி அணிந்தால்,உங்களுக்கு நக்கலா ?
கிண்டல் பண்ணுன பசங்களுக்கு காஞ்ச மிளகாயை சொருகிட்டாங்க.!
“தம்பிகளா ? நான் ஸ்விம் சூட் போட்டதாலேயே இப்படி எப்ப டைவர்ஸ்னு கேக்கிறீங்க.1920 -ம் ஆண்டு ஆன்ட்டி ,அங்கிள்க கிட்ட இருந்து விலகி 2021 ம் ஆண்டுக்கு வாங்கப்பா !
இந்த சமூகம் இப்படி ஆகிப்போச்சே !ஒரு பெண்ணுடைய ஆடைதான் விவாகரத்தை முடிவு பண்ணுதுன்னா ஒருத்தி கூட ஒழுங்கா டிரஸ் பண்ண முடியாது.ட்ரோல்களை இக்னோர் பண்ணும்மான்னார் என் கணவர்.அவர்களுடைய குறுகிய புத்திக்கு நாம் என்ன பண்ண முடியும்?”என்று நொந்திருக்கிறார் வித்யூலேகா !!