முன்னொரு காலத்தில் பேசப்படும் நடிகையாக இருந்தவர் அமலாபால். தமிழக இயக்குநர் விஜய்யுடன் டைவர்ஸ் ஆன பிறகு அவ்வளவாக இவரை திரையில் பார்க்க முடியவில்லை.அவரது இன்ஸ்டரா பக்கம்தான் தற்போது அவருக்கு சினிமாவாக இருந்து வருகிறது.
கரைக்கு வந்து விட்ட மீன்.! தேய் பிறை.!! இப்படியெல்லாம் சொல்லத் தோன்றுகிறது.
ஒருவர் வெளியேறிவிட்டால் அந்த இடத்தை மற்றவர் கொண்டு நிரப்பிவிடுவார்கள். அதைப்போல நாகார்ஜுனாவின் படமான ‘கோஸ்ட் ‘ படத்திலிருந்து காஜல் அகர்வால் வெளியேறியதும் அந்த இடத்தை நிரப்ப வந்திருக்கிறார் அமலாபால்.
நாகார்ஜுனா -அமலாபால் இருவரும் மலைப்பிரதேசத்தில் காதலில் சிக்குண்டு கரை புரண்டு மெய் மறப்பது போல காட்சி படமாக்கப்பட வேண்டும். இதை ஹைதராபாத் பிலிம் சிட்டியிலேயே படமாக்கி விட்டார்கள்.
சரி ,’அதென்ன, சிக்குண்டு ,கரை புரண்டு’மெய் மறப்பது?
நாகார்ஜுனாவுக்கு உதட்டில் முத்தமிட்டு ,மிகவும் நெருக்கமாக நடிக்க வேண்டும் என்பதையே அப்படி சொன்னோம்!
இதற்காக அமலாபால் அதிகமாக தொகை கேட்டாராம்.!
நாகார்ஜுனா கொடுத்திருப்பார் .அது அவரது இயல்பு.!