அகடு என்றால் என்ன?
பொல்லாங்கு என்கிறது திருக்குறள்.
அறிமுக இயக்குநர் சுரேஷ்குமாருக்கு தமிழ்ப்பற்று. ஒரு காலத்தில் தமிழில் பெயர் வைத்தால் அரசு பரிசு வழங்கியது.அது கலைஞரது பொற்கால அரசாங்கத்தில்.!
அவரது ஆட்சிக்கு பின்னர் வந்த அதிமுக அரசுக்கு தமிழ் மீது பற்றில்லை என்பதால் அந்த திட்டம் ஒழிந்தது.தற்போதுதான் அந்த ரப்பர் ஸ்டாம்ப் அரசு அகற்றப் பட்டிருக்கிறது .தமிழ்ச்சினிமாவில் மறுமலர்ச்சி வருமா?
சரி ,கதை என்ன?
கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்ற 4 உல்லாசப்பிரியர்கள் டாக்டர் தம்பதியினரை சந்திக்கிறார்கள்.அந்த தம்பதியினரின் 12 வயது பெண் பிள்ளையுடன் வாலிபர்களில் ஒருவரும் காணாமல் போகிறார்கள்.
போலீஸ் விசாரணை!
காணாமல் போன வாலிபன் சவமாக கிடைக்க அந்த பெண் பிள்ளையின் கதி என்னவாகியது?
போலீஸ் கண்டு பிடிக்கும்போது அகடு என்ன என்பது தெரிகிறது.!
இயல்பான சந்தேகங்களுக்கு பிறகு காணும் விடை என்ன?
அறிமுக இயக்குநர் சுரேஷ்குமார் எதிர்பாராத விடையை சொல்லுகிறார். அதிர்ச்சி !!
இன்ஸ்பெக்டராக ஜான் விஜய். அவர் வருகிற போதெல்லாம் செடியுடன் கூடிய கேரட்டும் வாயுமாகவே வருகிறார். என்ன மேனரிசம்.இது? வெறுப்பேற்றுகிறது ஜா.வி.!
சித்தார்த், ஸ்ரீராம், கார்த்திக், விஜய் ஆனந்த், அஞ்சலி நாயர் ஆகியோர் குறை வைக்கவில்லை.!
ஜோகன் இசையமைத்திருக்கிறார்.அவருடைய இசையில் கபிலனின் பாடல் கதைக்கேற்ப இருக்கிறது. சாம்ராட்டின் ஒளிப்பதிவில் கொடைக்கானல் அழகு சுற்றிச் சுற்றிப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பெண்ணின் உணர்வினை உரிய நேரத்தில் நிறைவு செய்யத் தவறுகிற கணவனால் ஏற்படுகிற விளைவுதான் கதையின் விரிவாக்கம்.!
கவனிக்கத் தகுந்த சப்ஜெக்ட்.!