“மி லார்ட்,! என் கட்சிக்காரரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்த யு டியூப் சேனல்கள் ,தனித்த சிலர் ,மீடியாக்கள் மீது டெபமேசன் வழக்கு தொடர்ந்துள்ளேன்.இதை அவசர வழக்காக எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.”
ஹைதராபாத் குக்கட் பள்ளி நீதி மன்றத்தில் பிரபல டி .வி. யான சுமன் டி.வி.உள்ளிட்ட வேறு சில டிவிக்கள் மீதும் ,யு டியூப் சேனல்கள் மீதும் சமந்தா சார்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.அந்த வழக்கில்தான் சமந்தாவின் வக்கீல் அவசர வழக்காக எடுத்துக் கொள்ளச் சொல்லி கேட்டிருக்கிறார்.
ஆனால் கூடுதல் மாவட்ட நீதிபதி மறுத்து விட்டார்.
“சட்டத்தின் முன்பாக அனைவரும் சமமே.! சிலர் உயர்ந்தவர்கள் ,சிலர் தாழ்ந்தவர்கள் என்கிற பேதமெல்லாம் சட்டத்துக்கு கிடையாது.உரிய நேரம் வரும்போது முறைப்படியான விசாரணை நடக்கும் ” என்று நீதிமன்றம் கூறி விட்டது.